கடந்த நான்கு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில இந்திய வார்ரூம் சேர்மன் திரு சசிகாந்த் செந்தில் MP அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், அகில இந்திய அமைப்புச் செயலாளர் திரு.கே.சி. வேணுகோபால் ஆகியேருடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தினுடைய காங்கிரஸ் கட்சியினுடைய பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை மற்றும் என்னுடைய முன்னிலையில் பழரசம் அருந்தி இன்று தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள். அவருடைய போராட்டம் மக்களுக்கான போராட்டம் அது பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலின தமிழக மாணவர்களின் கல்விக்கான போராட்டம் இந்த போராட்டத்தை அடுத்த கட்டமாக மக்கள் போராட்டமாக மாற்றுவதற்கு அவரோடு இணைந்து பயணிப்போம்.